யாழ்ப்பாணம்: இலங்கைத் தமிழரசுக் கட்சியின் உள்வீட்டு விவகாரங்களில் தேசிய மக்கள் சக்தி (NPP) தலையிடுவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என அக்கட்சியின் பதில் தலைவர் சீ.வீ.கே. சிவஞானம் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
யாழ். கல்வியங்காட்டிலுள்ள அவரது அலுவலகத்தில் இன்று (19) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இந்த அதிரடி கருத்துக்களை வெளியிட்டார்.
- கட்சி விவகாரத்தில் மூக்கை நுழைக்க வேண்டாம்: தமிழரசு கட்சியின் சிரேஷ்ட தலைவர்களான சிறீதரன் மற்றும் சுமந்திரன் இடையிலான விவகாரங்களில் அநுர தரப்பு ‘குத்தி முறிய வேண்டிய’ அவசியம் இல்லை. எமது கட்சியின் பிரச்சினைகளை நாங்கள் பார்த்துக்கொள்வோம். எம்மை மலினப்படுத்த நினைக்கும் அவர்களின் கனவு ஒருபோதும் பலிக்காது.
- அரச நிதியில் கட்சி அரசியல் (Show): ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் அண்மைய யாழ். விஜயத்தின் போது, மக்கள் பிரதிநிதிகளுக்கோ அல்லது ஏனைய கட்சிகளுக்கோ முறையான அழைப்புகள் விடுக்கப்படவில்லை. மக்கள் வரிப்பணத்தில் நடைபெறும் அரச நிகழ்வுகளில் NPP மற்றும் JVP கட்சியினர் மட்டுமே பங்கேற்று ‘சோ’ (Show) காட்டுவது கண்டிக்கத்தக்கது.
- படம் காட்டுவதை நிறுத்துங்கள்: வடக்கிற்கு வந்து வெறும் ‘படம் காட்டுவதை’ (Image Building) தேசிய மக்கள் சக்தி நிறுத்திக்கொள்ள வேண்டும். அரச நிதியைப் பயன்படுத்தி அரசியல் ஆதாயம் தேடுவதை ஜனாதிபதி உடனடியாகக் கவனத்தில் கொண்டு திருத்திக் கொள்ள வேண்டும்.
- விமர்சனங்களுக்கு இடமில்லை: புதிய அரசாங்கம் தமது அரசியலை வளர்ப்பதற்காகப் பழமைவாய்ந்த எமது கட்சியை விமர்சிப்பதையோ, எமது உள்விவகாரங்களில் தலையிடுவதையோ ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என அவர் தெறிக்கவிட்டார்.