எல்ல – பள்ளகெட்டுவ பகுதியில் உள்ள கலபிட்டகந்த பகுதியில் சிசு ஒன்றின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பல்லகெடுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு உடனடியாக சென்ற அதிகாரிகள், கலபிட்டகந்த பகுதியில் சிசு ஒன்று சடலமாக கிடந்ததை உறுதிப்படுத்தினர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக சிசுவின் பெற்றோர் யார் என்பதைக் கண்டறியும் நோக்கில் விரிவான விசாரணைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
மேலும், சிசுவின் மரணத்திற்கான காரணம் குறித்து மருத்துவ பரிசோதனைகள் மூலம் அறிக்கை பெறப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக தகவல்கள் விசாரணைகள் முன்னேறிய பின்னர் வெளியிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்தியின் உண்மைத்தன்மை
இச்சம்பவம் தொடர்பில் கல்வி அமைச்சு மற்றும் காவல்துறையினர் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.