Breaking News / முக்கிய செய்திகள்:
முகப்பு இலங்கை நாளை இலங்கையில் 6 மணிநேரம் ‘பவர்...
இலங்கை
25 February 2026, 6:01 pm

நாளை இலங்கையில் 6 மணிநேரம் ‘பவர் கட்’ அபாயமா….?

T
tharshi tharshathi
3 weeks முன்
புதிய செய்தி

​இலங்கை மின்சார சபையின் (CEB) தொழிற்சங்கங்கள் நாளை ஒரு பாரிய “அதிரடி” போராட்டத்தை அறிவித்துள்ளன. நாளை மதியம் உங்கள் வீட்டில் மின்சாரம் தடைப்பட்டால், அதைச் சீர்செய்ய ஆட்கள் வருவது சந்தேகம் தான்!

​நாளை என்ன நடக்கும்..??????

​நாளை (26.02.2026) வியாழக்கிழமை, நண்பகல் 12:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை நாடு தழுவிய ரீதியில் 6 மணிநேர அடையாள வேலைநிறுத்தப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

​ஏன் இந்தப் போராட்டம்?

​மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு – மின்சார சபையைத் துண்டு துண்டாகப் பிரிக்கும் அரசின் திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு.

கோரிக்கைகள் – நீண்டகாலமாகத் தீர்க்கப்படாத 8 முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து இந்த “வார்னிங்” வழங்கப்பட்டுள்ளது.

​சாதாரண தரப் பரீட்சை – மாணவர்களின் பரீட்சை முடியும் வரை காத்திருந்த தொழிற்சங்கங்கள், பரீட்சை முடிந்த கையோடு களத்தில் இறங்கியுள்ளன.

​பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை..

பராமரிப்புப் பணிகள் நிறுத்தம் – நாளை மதியம் 12 மணிக்குப் பிறகு மின் விநியோகத்தில் ஏதேனும் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டால், மாலை 6 மணி வரை அது சரி செய்யப்படாது.

கட்டணம் செலுத்துதல் – மின்சார சபை அலுவலகங்களின் அன்றாடச் செயல்பாடுகள் பாதிக்கப்படலாம்.

அடுத்த அதிரடி – நாளை தீர்வு கிடைக்காவிட்டால், பெப்ரவரி 27 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் ஆரம்பமாகும் என தொழிற்சங்கங்கள் “ஷாக்” கொடுத்துள்ளன!

செய்தியின் உண்மைத்தன்மை

இச்சம்பவம் தொடர்பில் கல்வி அமைச்சு மற்றும் காவல்துறையினர் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.