மட்டக்களப்பில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் ஏற்பட்ட திடீர் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக மீண்டும் பாவனையாளர்கள் கியூ வரிசை நின்று எரிபொருள் நிலைமை ஏற்பட்டுள்ளது.

வாழைச்சேனை, கிரான்,ஓட்டமாவடி,மட்டக்களப்பு நகர் ஆரையம்பதி, காத்தான்குடி, தாளங்குடா, கொக்கட்டிசோலை, குருக்கள்மடம் போன்ற எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இவ் நிலைமை ஏற்பட்டுள்ளது.

அம்பாறை மாவட்டத்தின் கல்முனை, நற்பிட்டிமுனை, மருதமுனை ,பெரிய நீலாவணை, சாய்ந்தமருது, காரைதீவு ,சம்மாந்துறை ,நிந்தவூர், உள்ளிட்ட பகுதிகளில் இவ்வாறான நிலைமை தொடர்கின்றது.

வளைகுடா நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள யுத்த பதட்ட நிலை காரணமாக நாளை எரிபொருளுக்கான விலைகளில் மாற்றம் ஏற்படக்கூடும் அல்லது தட்டுப்பாடு ஏற்படும் என்ற நிலைமையை அறிந்த மக்கள் முண்டியடித்துக் கொண்டு எரிபொருள் நிலையங்களில் வரிசையில் நின்று எரிபொருள் நிரப்புவதைக் காணக் கூடியதாக உள்ளது. இதேவேளை சில எரிபொருள் நிலையங்கள் மூடிக் காணப்படுகின்றது.
செய்தியின் உண்மைத்தன்மை
இச்சம்பவம் தொடர்பில் கல்வி அமைச்சு மற்றும் காவல்துறையினர் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.