Breaking News / முக்கிய செய்திகள்:
முகப்பு இலங்கை அன்னமலை பிரதேச வைத்தியசாலைக்கு பிராந்திய பணிப்பாளர்...
இலங்கை
01 March 2026, 6:29 pm

அன்னமலை பிரதேச வைத்தியசாலைக்கு பிராந்திய பணிப்பாளர் விஜயம்..!

T
tharshi tharshathi
2 weeks முன்
புதிய செய்தி

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி திருமதி சகீலா இஸ்ஸடீன் சனிக்கிழமை (28) அன்னமலை பிரதேச வைத்தியசாலைக்கு விஜயம் செய்து, அதன் அபிவிருத்திப் பணிகள் குறித்து கலந்துரையாடினார்.

அன்னமலை வைத்தியசாலையின் தற்போதைய நிலை மற்றும் எதிர்கால அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பாக வைத்தியசாலை அபிவிருத்திக் குழுவினர் மற்றும் நிருவாகத்தினருடன் கலந்துரையாடிய பணிப்பாளர் வைத்தியசாலையில் நிலவும் நிர்வாகச் சிக்கல்கள், ஆளணிப் பற்றாக்குறை மற்றும் வளப்பற்றாக்குறைகள் குறித்தும் கேட்டறிந்துகொண்டார்.

இதன்போது வைத்தியசாலை நிருவாகத்தினர் மற்றும் அபிவிருத்திக் குழுவினரால் முன்வைக்கப்பட்ட பிரச்சினைகளுக்கு அவ்விடத்திலேயே உடனடித் தீர்வுகளை வழங்கிய பணிப்பாளர், வைத்தியசாலையின் உட்கட்டுமான மேம்பாட்டுப் பணிகளுக்காக இந்த வருடம் நிதியொதுக்கீடுகளை செய்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.


இக்கலந்துரையாடலில் பிராந்திய கண்காணிப்பு மற்றும் மதிப்பீட்டுப் பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி டொக்டர் எம்.சீ.எம்.மாஹிர், அன்னமலை வைத்தியசாலையின் வைத்திய அதிகாரிகள் மற்றும் வைத்தியசாலை அபிவிருத்திக் குழு உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

செய்தியின் உண்மைத்தன்மை

இச்சம்பவம் தொடர்பில் கல்வி அமைச்சு மற்றும் காவல்துறையினர் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.