விஷமருந்து தடுப்பு வாரத்தை முன்னிட்டு “நாடு முழுவதுமே “
தேசிய திட்டத்துடன் இணைந்து, ஹாலிஎல நகரில் இன்று (04) சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது.


ஹாலிஎல பொலிஸ் பிரிவு,ஹாலிஎல பிரதேச செயலகம், ஹாலிஎல பிரதேச சபை ஆகிய நிறுவனங்களின் ஒருங்கிணைப்பில்
இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.

நகர மையப் பகுதியில் நடைபெற்ற இந்நிகழ்வில், விஷமருந்து பயன்பாட்டின்1 ஆபத்துகள், இளைஞர்களின் எதிர்காலத்துக்கு ஏற்படும் பாதிப்புகள் மற்றும் சமூக பொறுப்புணர்வு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.


துண்டுப்பிரசுரங்கள் விநியோகம், பொதுமக்களுடன் கலந்துரையாடல் மற்றும் விழிப்புணர்வு உரைகள் ஆகியனவும் இடம்பெற்றன.


இந்நிகழ்வில் அதிகாரிகள், சமூக அமைப்புகள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் பெருமளவில் கலந்துகொண்டனர். “ நாடு முழுவதுமே ” என்ற ஒருங்கிணைந்த தேசிய நோக்கத்துடன், போதைப்பொருள் ஒழிப்பை சமூக மட்டத்தில் வலுப்படுத்த வேண்டும் என ஏற்பாட்டாளர்கள் வலியுறுத்தினர்.
செய்தியின் உண்மைத்தன்மை
இச்சம்பவம் தொடர்பில் கல்வி அமைச்சு மற்றும் காவல்துறையினர் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.