Breaking News / முக்கிய செய்திகள்:
முகப்பு இலங்கை குட்டியப்புலம் அ.த.க பாடசாலையில் சாதனையாளர்கள் கௌரவிப்பு.
இலங்கை
06 March 2026, 12:07 pm

குட்டியப்புலம் அ.த.க பாடசாலையில் சாதனையாளர்கள் கௌரவிப்பு.

T
tharshi tharshathi
1 week முன்
புதிய செய்தி


கடந்த வருடம் யா/குட்டியப்புலம் அ.த.க பாடசாலையில் இருந்து தேசிய ரீதியிலும், மாகாண ரீதியிலும் வெற்றி பெற்ற மாணவர் கௌரவிப்பு நிகழ்வு இன்று (மார்ச் 5 ஆம் திகதி) பாடசாலை முதல்வர் திருமதி நளாயினி சஞ்சீவன் தலைமையில் இடம்பெற்றது.

இதில் கல்வி அமைச்சின் விஞ்ஞான கிளையும், இலங்கை விஞ்ஞான வளர்ச்சி முன்னேற்ற சங்கமம் இணைந்து நடாத்திய இளம் விவசாய விஞ்ஞானி போட்டியில் தங்க பதக்கம் பெற்ற மாணவி க. நதீனா மற்றும் மாகாண மட்ட விசேட தேவை உடைய மாணவர் தடகளப் போட்டியில் 100m, 80m, நீளம் பாய்தல் என்பவற்றில் வெற்றி பெற்ற செ. பவித்ரா ஆகிய மாணவர்கள் நினைவு கேடயம் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

விழாவில் தெல்லிப்பழை கோட்டக்கல்வி பணிப்பாளர் திரு.வெ. அரசகேசரி, வலிகாமம் கல்வி வலய விவசாய பாட ஆசிரிய ஆலோசகர் திரு. ப. அருந்தவம், யாழ்ப்பாண களக்கற்கைகள் நிலைய முகாமையாளர் திரு. ஆ. கோகுலராஜன் ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களை வாழ்த்தியுமிருந்தனர்.

செய்தியின் உண்மைத்தன்மை

இச்சம்பவம் தொடர்பில் கல்வி அமைச்சு மற்றும் காவல்துறையினர் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.