Breaking News / முக்கிய செய்திகள்:
முகப்பு இலங்கை சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை...
இலங்கை
06 March 2026, 4:55 am

சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை சாய்ந்தமருது பிரதேச செயலகம் இணைந்து போதைப் பொருட்கள் விழிப்புணர்வு.

T
tharshi tharshathi
1 week முன்
புதிய செய்தி

இலங்கை அரசினால் அனுஷ்டிக்கப்படும் ‘அகன்று செல்’ எனும் தொனிப்பொருளில் அடிப்படையில் போதைப் பொருட்கள் நாட்டிற்கும் வீட்டிற்கும் கேடு என்பதற்கமைய போதைப்பொருள்களிலிருந்து மக்களை அகற்றி அவர்களை பாதுகாக்கும் நோக்கில் சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் மற்றும் சாய்ந்தமருது பிரதேச செயலகம் இணைந்து நடைபயண செயற்பாடு வியாழக்கிழமை(5) மேற்கொள்ளப்பட்டது.

அதனைத் தொடர்ந்து சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஜே. மதன் தலைமையில் சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தில் பணிபுரியும் பொது சுகாதார பரிசோதகர்கள், டெங்கு கட்டுப்பாட்டு உத்தியோகத்தர்கள் மற்றும் காரியாலய உத்தியோகத்தர்கள் இணைந்து சாய்ந்தமருது பிரதேசத்தில் உள்ள சிகை அலங்கார நிலையங்கள் மற்றும் பொதுமக்கள் அதிகளவில் கூடும் இடங்களை மையமாகக் கொண்டு, மக்களை போதைப்பொருள்களிலிருந்து பாதுகாக்கும் வகையில் விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

செய்தியின் உண்மைத்தன்மை

இச்சம்பவம் தொடர்பில் கல்வி அமைச்சு மற்றும் காவல்துறையினர் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.