பதுளை ஸ்பிரிங்வெளி, நாவலவத்தை மற்றும் மேமலை தோட்டப் பகுதிகளைச் சேர்ந்த சுமார் 900 பாடசாலை மாணவர்களுக்கு இலவச பாதணிகள் வழங்கும் மனிதாபிமான உதவித் திட்டம் இன்று (06) முன்னெடுக்கப்பட்டது.

பலாங்கொட பெருந்தோட்ட நிறுவனத்தின் அனுசரணையுடன் இந்த உதவித் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. ஸ்பிரிங்வெளி தோட்ட முகாமையாளர் கசுன் பல்லேமுல்ல அவர்களின் ஏற்பாட்டில் இந்நிகழ்வு நடைபெற்றது.
இந்த நிகழ்வில் பலாங்கொட பெருந்தோட்ட நிறுவனத்தின் நிறைவேற்று பணிப்பாளர் திமுது வெகுனுகொட பிரதம விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்களுக்கு பாதணிகளை வழங்கினார்.
மேலும், இந்நிகழ்வில் பதுளை வலய கல்வி பணிப்பாளர், பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், ஸ்பிரிங்வெளி தோட்ட அலுவலக அதிகாரிகள் மற்றும் வெளிக்கள உத்தியோகஸ்தர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

தோட்டப் பகுதிகளில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை வழங்கும் நோக்கில் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
செய்தியின் உண்மைத்தன்மை
இச்சம்பவம் தொடர்பில் கல்வி அமைச்சு மற்றும் காவல்துறையினர் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.