Breaking News / முக்கிய செய்திகள்:
முகப்பு இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் “Fulbright Section” உதயம்:...
இலங்கை
13 March 2026, 8:04 am

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் “Fulbright Section” உதயம்: சர்வதேச கல்விக்கான புதிய நுழைவாயில்!

T
tharshi tharshathi
2 days முன்
புதிய செய்தி

தென் கிழக்குப் பல்கலைக்கழக நூலகத்தில் “Fulbright Section” எனும் புதிய தகவல் மற்றும் வளப் பகுதி 2026.03.12 ஆம் திகதி நூலகத்தின் மேல்தளத்தில் திறந்து வைக்கப்பட்டது.


இந்த நிகழ்வு தென் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் நூலகர் எம்.எம். றிபாவுத்தீன் அவர்களது நெறிப்படுத்தலில் உபவேந்தர் பேராசிரியர் கலாநிதி எஸ். எம். ஜுனைதீன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. நிகழ்வின் பிரதம அதிதியாக அமெரிக்கா–இலங்கை Fulbright ஆணையத்தின் பிரதிநிதி கலாநிதி பட்ரிக் மெக்னமாரா அவர்கள் கலந்து கொண்டு Fulbright Section-ஐ திறந்து வைத்தார்.


நிகழ்வில் உரையாற்றிய அவர், ஒரு பல்கலைக்கழகத்தின் வளர்ச்சியை அதன் நூலகத்தின் மூலம் அறிய முடியும் என்றும், நூலகம் ஒரு பல்கலைக்கழகத்தின் “இதயம்” எனவும் குறிப்பிட்டார். மேலும் அமெரிக்காவின் Library of Congress உலகின் மிகப்பெரிய நூலகமாக விளங்குவதுடன், அதன் நூலக வகைப்பாடு மற்றும் பட்டியலிடும் முறை உலகின் பல நூலகங்களில் பயன்படுத்தப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
இதனுடன் தொடர்பாக, Library of Congress-இல் பணிபுரியும் ஒரு நூலக நிபுணர் எதிர்வரும் ஆகஸ்ட் மாதத்தில் இலங்கைக்கு வர உள்ளதாகவும், அவர் தென் கிழக்குப் பல்கலைக்கழகத்திற்கும் வருகை தந்து நூலகம் மற்றும் சர்வதேச கல்வி வாய்ப்புகள் தொடர்பான ஒரு கருத்தரங்கம் அல்லது பயிற்சி நிகழ்ச்சியில் பங்கேற்க ஏற்பாடு செய்ய விரும்புவதாகவும் தெரிவித்தார்.


இதேவேளை, உபவேந்தர் பேராசிரியர் எஸ்.எம். ஜுனைடீன் தனது உரையில், இன்றைய காலத்தில் நூலகம் என்பது புத்தகங்களை சேமித்து வைக்கும் இடமாக மட்டுமன்றி உலகளாவிய கல்வி தொடர்புகளை உருவாக்கும் முக்கிய தளமாக மாறிவருவதாகக் குறிப்பிட்டார். புதிய Fulbright Section மூலம் மாணவர்கள் மற்றும் கல்வியாளர்கள் சர்வதேச கல்வி, ஆராய்ச்சி மற்றும் புலமைப்பரிசில் வாய்ப்புகள் தொடர்பான தகவல்களைப் பெறுவதற்கான முக்கிய வாய்ப்பு உருவாகும் என்றும் அவர் தெரிவித்தார்.


மேலும், இந்த Fulbright Section மூலம் Fulbright புலமைப்பரிசில் திட்டங்கள், வெளிநாடுகளில் உயர் கல்வி கற்கும் வழிமுறைகள், GRE மற்றும் TOEFL போன்ற தேர்வுகளுக்கான தயாரிப்பு வளங்கள் மற்றும் சர்வதேச கல்வி தொடர்பான தகவல்கள் மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் கல்வியாளர்களுக்கு வழங்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.


புதியதாக நிறுவப்படும் இந்த Fulbright Section மூலம் Fulbright புலமைப்பரிசில் திட்டங்கள், சர்வதேச கல்வி பரிமாற்ற வாய்ப்புகள், வெளிநாடுகளில் உயர் கல்வி கற்கும் வழிகள் மற்றும் ஆராய்ச்சி வாய்ப்புகள் தொடர்பான பல்வேறு தகவல்கள் மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் கல்வியாளர்களுக்கு வழங்கப்படவுள்ளன.
மேலும், Fulbright Scholarship திட்டங்களுக்கான விண்ணப்ப நடைமுறைகள், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் கல்வி பெறுவதற்கான வழிகாட்டுதல்கள், கல்வி பரிமாற்ற திட்டங்கள் மற்றும் உலகளாவிய கல்வி மற்றும் ஆராய்ச்சி தொடர்பான தகவல் வளங்களும் இந்த பிரிவில் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


இந்த முயற்சி மூலம் தென் கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் கல்வியாளர்கள் உலகளாவிய கல்வி வாய்ப்புகளை அறிந்து பயன்படுத்துவதற்கான புதிய வாயிலாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிகழ்வு தென் கிழக்குப் பல்கலைக்கழக நூலகங்களினால் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. பல்கலைக்கழகத்தின் மாணவர்கள், பேராசிரியர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் நூலக வாசகர்கள் அனைவரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உலகளாவிய கல்வி மற்றும் ஆராய்ச்சி வாய்ப்புகளை அறிந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
நிகழ்வின்போது EducationUSA ஆலோசகர் ஈசா ஸ்போரி, புல்பிரைட் விசேட திட்டத்தின் கீழ் வருகை தந்த கலாநிதி ரொபர்ட் டிபினிஸ், தென்கிழக்குப் பல்கலைக்கழக விரிவுரையாளர் எம்.ஏ.எம். சமீம், சிரேஷ்ட உதவி நூலகர் எஸ்.எல். எம். சஜீர் மற்றும் விரிவுரையாளர்கள், மாணவர்கள், நூலக ஊழியர்கள் என பலரும் பங்கு கொண்டிருந்தனர்.

செய்தியின் உண்மைத்தன்மை

இச்சம்பவம் தொடர்பில் கல்வி அமைச்சு மற்றும் காவல்துறையினர் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.