மட்டக்களப்பு மண்முனை பற்று பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட ஆரையம்பதி பலபகுதிகளில்பிரதானவீதிகளில்கட்டாக்காலிமாடுகளின்தொல்லையினால் வாகனசாரதிகளும் பாதசாரிகளும் பாடசாலைமாணவர்களும் பெண்களும் முதியவர்களும்பலவிதமான பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க வேண்டியுள்ளது.
கட்டாக்காலி மாடுகளை மேய்ச்சலுக்குவிடுவோர் ஆய்ந்தோய்ந்து பாராமல்தமது பராமரிப்பிலுள்ள மாடுகளைமக்கள் பயன்படுத்தும் பாதைகளிலும் குறிப்பாக பிரதான வீதிகளில் விடுவதனால்வீதி விபத்துக்கள்அண்மைக்காலங்களில்இடம்பெற்றுள்ளன.

வீதியில் பயணிக்கும் மோட்டார்சைக்கிளுக்கு முன்னால் இவைதிடீரென பாய்வதால் விபத்துக்குள்ளாகி பலர்படுகாயமடைந்து இந்த பிரதேசத்தில் பலர் வாழ்ந்து வருகின்றனர்.
மாடுகள் கழிக்கு மலத்தினால் பல விதமான சுகாதார சீர்கேடுகள் இடம்பெறுவதுடன் மலத்தில் வழுக்கி விபத்துக்களும் சம்பவித்துள்ளன.ஆரையம்பதி பிரதேச சபையாலும்
இவ்விடயம் தொடர்பாக தீர்மானங்கள் கொண்டு வந்தும் நடவடிக்கைகள் தீவிரமாக எடுக்கப்படவில்லை என பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
தொடர்ச்சியான நிலையான திட்டமொன்று வகுக்கப்படாமையினால் தொடர்ந்தும் இக்கட்டாக்காலி மாடுகள்பிரதான வீதிகளிலேயே திரிகின்றன.இது தொடர்பில் சம்பந்தப்பட்டஅதிகாரிகள் கூடிய கவனம் செலுத்துமாறு ஆரையம்பதி பிரதேச மக்கள் கேட்டுள்ளனர்.
செய்தியின் உண்மைத்தன்மை
இச்சம்பவம் தொடர்பில் கல்வி அமைச்சு மற்றும் காவல்துறையினர் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.