Breaking News / முக்கிய செய்திகள்:
முகப்பு இலங்கை மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலகம்...
இலங்கை
11 March 2026, 3:36 am

மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலகம் நடாத்திய மகளிர் தின நிகழ்வு – 2026

T
tharshi tharshathi
5 days முன்
புதிய செய்தி

“பெண்களின் தலைமைத்துவம் – செழிப்பான தேசத்தின் பெருமை ” எனும் தொனிப்பொருளின் கீழ் கொண்டாடப்படும் இவ்வருடத்திற்கான சர்வதேச மகளிர் தினத்தினை முன்னிட்டு, மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலகம் ஏற்பாடு செய்த மகளிர் தின நிகழ்வானது பிரதேச செயலாளர் உ உதயஸ்ரீதர் அவர்களின் தலைமையில் இன்று (10.03.2026) பிரதேச செயலக ஒன்றுகூடல் மண்டபத்தில் இடம்பெற்றது.

இதன்போது பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பெண் சுயதொழில் முயற்சியார்களுக்கான வாழ்வாதார கடன் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றதுடன், சுயதொழில் முயற்சியார்களின் அனுபவ பகிர்வும் இடம்பெற்றது.

மேலும் பெண் சுயதொழில் முயற்சியார்களை கெளரவிக்கும் நிகழ்வு இடம்பெற்றதுடன், சிறுவர் இல்ல மாணவர்கள் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்களின் கலை நிகழ்வுகளும் மகளிர் தினத்தை அலங்கரித்தது.

இந்த நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர் சத்யகெளரி தரணிதரன், கணக்காளர் வ. நாகேஸ்வரன், நிருவாக உத்தியோகத்தர் கே. கருணாநிதி, பிரதேச செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள், அலுவலக உத்தியோகத்தர்கள் உட்பட மகளிர் மற்றும் சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்புகளின் பிரதிநிதிகள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

மேலும் இவ்வருட மகளிர் தினத்தினை முன்னிட்டு பெண் தொழில் முயற்சியாளர்களுக்கான விற்பனை மற்றும் கண்காட்சி நிகழ்வு, பட்டிமன்றம், மருத்துவ பரிசோதனை முகாம் போன்ற பல நிகழ்வுகள் சிறுவர் மற்றும் மகளிர் பிரிவினரால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

செய்தியின் உண்மைத்தன்மை

இச்சம்பவம் தொடர்பில் கல்வி அமைச்சு மற்றும் காவல்துறையினர் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.