Breaking News / முக்கிய செய்திகள்:
முகப்பு இலங்கை முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்களுக்கான இலஞ்சம் மற்றும்...
இலங்கை
13 March 2026, 8:14 am

முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்களுக்கான இலஞ்சம் மற்றும் ஊழலற்ற பணித்துறை செயலமர்வு!

T
tharshi tharshathi
2 days முன்
புதிய செய்தி

பொது நிருவாக மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சினால் மட்டக்களப்பில் இருந்து புதிதாக தெரிவு செய்யப்பட்ட முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்களாகளுக்கான இலஞ்சம் மற்றும் ஊழலற்ற பணித்துறை தொடர்பான செயலமர்வானது மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ் அருள்ராஜ் அவர்களின் ஆலோசனையின் கீழ் புதிய மாவட்ட செயலகத்தில் இன்று (10) இடம் பெற்றது.

இச் செயலமர்வின் வளவாளராக மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் திருமதி. சிவப்பிரியா வில்வரத்னம் அவர்கள் தெளிவூட்டல்களை வழங்கினார்.

ஊழல் பற்றி இலங்கையின் சட்ட ரீதியான பொருள் கோடல் தொடர்பான விளக்கங்கள், 2023 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட இலஞ்ச ஊழல் ஒழிப்பு சட்டம் தொடர்பான விளக்கங்களும் வழங்கப்பட்டது.

அத்துடன் ஊழலின் பல்வேறுபட்ட வடிவங்கள் மற்றும் ஊழலின் வகைகள், சட்டத்திற்கெதிரான கையூட்டல் பணிக்கொடை, கமிசன் பெற்றுக் கொள்ளல், ஊழலின் தாக்கங்கள், முறையற்ற பாரபட்சம், ஊழலைத்தடுக்கும் சட்ட திட்டங்கள் மேலும் நடைமுறைசார் லஞ்சம், உள்ளக அலுவல்கள் பிரிவின் செயற்பாடு மற்றும் ஊழல் தொடர்பான விடய ஆய்வுகள் மூலம் உத்தியோகத்தர்களுக்கு தெளிவூட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

செய்தியின் உண்மைத்தன்மை

இச்சம்பவம் தொடர்பில் கல்வி அமைச்சு மற்றும் காவல்துறையினர் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.