மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முனைக்காடு மாரியம்மன் கோவில் வீதி மேற்கு பகுதியில் வசித்து வரும் ஐந்து பிள்ளைகளின் தாய் ஒருவர் காட்டு யானை தாக்குதலுக்குள்ளாகி பலியாகியுள்ளார்.
மேலும் ஏழு வீடுகளை பகுதியளவில் சேதப்படுத்தியதுடன்( 76) வயதுடைய கதிர்காமத் தம்பி சிவபாக்கியம் எனும் வயோதிப பெண் ஒருவரே வீட்டின் முற்றத்தில் இருந்த நிலையில் திடீரென வளவிற்குள் உட் புகுந்த யானை இன்று (27) திகதி காலை 06.00 மணியளவில் காட்டு யானையின் தாக்குதலுக்குள்ளாகி பலியாகியுள்ளார்.

திடீர் மரண விசாரனை அதிகாரி கதிர்காமபோடி டினேஸ்வரன் சம்பவ இடத்திற்கு வருகை தந்து சடலத்தை பார்வையிட்டதுடன், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு சடலத்தை எடுத்துச் சென்று பிரேத பரிசோதனையின் பின்னர் உறவினரிடம் சடலத்தை ஒப்படைக்குமாறு கொக்கட்டிச் சோலை பொலிசாருக்கு உத்தரவிட்டுள்ளார்.

செய்தியின் உண்மைத்தன்மை
இச்சம்பவம் தொடர்பில் கல்வி அமைச்சு மற்றும் காவல்துறையினர் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.