Breaking News / முக்கிய செய்திகள்:
முகப்பு இலங்கை தோட்ட நிர்வாகத்திற்கு எதிராக போர் கொடி..!!
இலங்கை
04 March 2026, 10:16 am

தோட்ட நிர்வாகத்திற்கு எதிராக போர் கொடி..!!

T
tharshi tharshathi
2 weeks முன்
புதிய செய்தி

8 கோரிக்கைகளை முன்வைத்து யதன்சைட் தொழிலாளர்கள் வீதியிலிறங்கி போராட்டம்

கொட்டகலை பெருந்தோட்ட கம்பெனிக்குட்பட்ட யுலிபீல்ட் தோட்டத்தின் யதன்சைட் பிரிவு தொழிலாளர்கள் 08 கோரிக்கைகளை முன் வைத்து கொட்டகலை நுவரெலியா பிரதான வீதியில் டிரேட்டன் சந்தியில் 03 ம் திகதி அன்று மாலை 5.00 மணியளவில் போராட்டத்தில் ஈடுபட்டனனர்.


குறித்த தோட்டத்தில் வேலை செய்யும் 100 இற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர். ‘

10 கிலோ கொழுந்துக்கான நிர்னைக்கப்பட்ட விலையில்லை’.ஞாயிறு தினத்தில் ஒன்றரை நாள் பேர் வேண்டும்.10 கிலோவுக்கு ஆறுகிலோ கழிப்பதை நிறுத்த வேண்டும்’. உரிய நேரத்திற்கு வேலை நிறுத்தப்பட வேண்டும் போன்ற வாசகங்களை எழுதிய சுலோக அட்டைகள் காட்சிப்படுத்தியவாறு போராடுவோம் போராடுவோம் உரிமையினை பெற்றுக்கொள்ளும் வரை போராடுவோம் என கோசமிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன் போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தோட்டத்தொழாளர்கள் கருத்து தெரிவிக்கையில் அரசாங்கத்தினால் உயர்த்தப்பட்ட சம்பள உயர்வு கொடுப்பனவு உள்ளிட்ட எதுவும் முறையாக கொடுக்கப்படுவதில்லை. என்று நியாயத்தினை கேட்டால் குரல் உயர்த்தி பேசுவதாக கூறி வேலை நிறுத்தப்படுவதாகவும் தொழிலாளர்களின் சலுகைகள் எதுவும் பெற்றுக்கொடுப்பதில்லை என்றும் குளவி கொட்டுக்கு இலக்காகி இரண்டு பேர் இது வரை இறந்துள்ள நிலையில் தொழிலாளர்கள் சுகயீனமுற்றால் வாகன வசதிகளோ அல்லது வேறு தேவைகளை பெற்றுக்கொடுப்பதில்லை என்றும் சம்பளத்தினை முறையாக உரிய நேரத்திற்கு வழங்குவதில்லை தோட்டத்தொழலாளர்கள் அடிமைகளாக நடத்தப்படுகிறார்கள் இங்கு கடமையாற்றும். தோட்ட அதிகாரி முதல் ஏனைய உத்தியோகஸ்தர்களையும். உடனடியாக மாற்ற வேண்டுமென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

கடந்த 28ம் திகதி பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து வேலை நிறுத்த போராட்டத்தின் ஈடுபட்ட தொழிலாளர்களுக்கு உரிய நீதி கிடைக்காத காரணத்தினால். நமக்கு உடனடியாக தீர்வு வழங்க வேண்டும் என வீதியில் இறங்கி ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுத்தமை குறிப்பிடத்தக்கது.

செய்தியின் உண்மைத்தன்மை

இச்சம்பவம் தொடர்பில் கல்வி அமைச்சு மற்றும் காவல்துறையினர் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.