Breaking News / முக்கிய செய்திகள்:
முகப்பு உலகம் ஈரானிய போர்க்கப்பலை சேர்ந்தவர்களின் உடல்கள்! தீவிர...
உலகம்
04 March 2026, 12:26 pm

ஈரானிய போர்க்கப்பலை சேர்ந்தவர்களின் உடல்கள்! தீவிர தேடல் இலங்கை கடற்படையினர்….

T
tharshi tharshathi
2 weeks முன்
புதிய செய்தி

புதிய இணைப்பு 

கடற்படை செய்தித் தொடர்பாளர் புத்திக சம்பத்,  ஈரானிய கப்பலின் பணியாளர்கள் என சந்தேகிக்கப்படும் பல உடல்கள் கண்டெடுக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார். 

மேலும் அவர், “எங்களுக்குக் கிடைத்த தகவலின்படி, விபத்து நடந்த இடத்திற்குச் சென்றபோது, ​​ஒரு பெரிய எண்ணெய் படலத்தை மட்டுமே நாங்கள் கண்டோம். எனவே, கப்பல் மூழ்கிவிட்டதாக நாங்கள் அறிவிக்க முடியும்.

இருப்பினும், இலங்கை இதுவரை கப்பலில் இருந்து 32 பேரை மீட்டு காலியில் உள்ள கராபிட்டிய மருத்துவமனையில் அனுமதித்துள்ளது. அவர்களிடமிருந்து தகவல்களைப் பெற்ற பின்னரே கூடுதல் விவரங்களைத் தெரிவிக்க முடியும்.”

“கடலில் மிதக்கும் பல உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. கண்டெடுக்கப்பட்ட உடல்கள் கப்பல் பணியாளர்களின் உடல்களாக இருக்கலாம் என்று நாங்கள் சந்தேகிக்கிறோம்.

நாங்கள் முதன்மையாக விபத்துக்குள்ளான கப்பலின் உயிர்களைக் காப்பாற்றுவதைப் பார்க்கிறோம். அப்போதுதான் இது எப்படி நடந்தது என்பது குறித்த விசாரணை மற்றும் தொழில்நுட்ப அறிக்கையைப் பெற முடியும்.

மற்றவர்கள் உயிருடன் இருந்தால் அவர்களை மீட்பதே எங்கள் முக்கிய கவனம். இந்தக் கப்பலில் எத்தனை பேர் காணாமல் போனார்கள் என்பது தொடர்பில் எதிர்காலத்தில் அறியத்தருவோம்.” என குறிப்பிட்டுள்ளார். 

முதலாம் இணைப்பு 

இலங்கை கடற்பரப்பில், ஈரான் கப்பல் மீதான நீர்மூழ்கிக் கப்பல் தாக்குதல் குறித்த முந்தைய அறிக்கையில் சில திருத்தங்கள் இருப்பதாக இலங்கை கடற்படை சற்று முன்னர் தெரிவித்துள்ளது. 

இலங்கை கடற்கரையில் ஈரானிய போர்க்கப்பல் மீதான நீர்மூழ்கிக் கப்பல் தாக்குதலுக்குப் பிறகு குறைந்தது 101 பேர் காணாமல் போயுள்ளதாகவும் 78 பேர் காயமடைந்துள்ளதாகவும் இலங்கை கடற்படை கூறியதாக முன்னர் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

இந்நிலையில், முன்னர் கொடுக்கப்பட்ட புள்ளிவிவரங்கள் சரியானவை அல்ல என்று கடற்படை செய்தித் தொடர்பாளர் புத்திக சம்பத் தற்போது தெரிவித்துள்ளார்.

அதன்படி, சம்பவத்தில் காயமடைந்த 32 பேர் கடற்படையால் மீட்கப்பட்டு தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக செய்தித் தொடர்பாளர் கூறுகிறார்.

தகவல் அறிந்து குறித்த பகுதிக்கு நாங்கள் சென்றிருந்த போது, கப்பல் மூழ்கியிருந்ததாகவும் அதன்போது நீரிற்குள் தேடலில் ஈடுபட தொடங்கியதாகவும் தெரிவித்துள்ளார். 

இதன்போதே நீரில் தத்தளித்துக் கொண்டிருந்த மக்களை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்ததாக என குறிப்பிட்டுள்ளார். 

அதேநேரம், குறித்த பகுதியில் இருந்து 32 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாகவும் சில சடலங்களும் மீட்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார். 

இருப்பினும், மீட்கப்பட்ட சடலங்கள், ஈரானிய போர்க்கப்பலில் பயணித்தவர்களாக இருக்கலாம் என தாங்கள் சந்தேகிப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

மேலும், தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கை இன்னும் நடந்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

செய்தியின் உண்மைத்தன்மை

இச்சம்பவம் தொடர்பில் கல்வி அமைச்சு மற்றும் காவல்துறையினர் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.