Breaking News / முக்கிய செய்திகள்:
முகப்பு இலங்கை மட்டக்களப்பு கிரான் அன்னை ஸ்ரீ சாரதா...
இலங்கை
10 March 2026, 11:12 am

மட்டக்களப்பு கிரான் அன்னை ஸ்ரீ சாரதா தேவி அறநெறி பாடசாலையின் பொங்கல் விழாவும் கலை நிகழ்வும்,

T
tharshi tharshathi
5 days முன்
புதிய செய்தி

மட்டக்களப்பு கிரான் அன்னை ஸ்ரீ சாரதா தேவி அறநெறி பாடசாலையின் பொங்கல் விழாவும் கலை நிகழ்வும் கிரான் மத்திய கல்லூரி மண்டபத்தில் நடைபெற்றது. மாணவர்களிடயே தமிழர் பண்பாடு மற்றும் இயற்கைக்கு நன்றி செலுத்தும் பண்பினை சிறு பராயம் முதல் அறிமுகம் செய்யும் வகையில் இவ் நிகழ்வு
கிரான் இந்து சமய வளர்ச்சி மன்றத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டது.

அதிதிகளாக கிரான் பிரதேச செயலக கலாச்சார உத்தியோகத்தர்களான ப.சிவராம்.எல்.தேவஅதிரன் . திருமதி ம.கலைவாணி.கிராம சேவகர்
ஆ.உமாவிஜிதா ஆலய மத குருமார்கள்.பிரதேச ஆலய தலைவர்கள் மற்றும் பிரதேச பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் ஆகியோர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.


கிரான் அன்னை ஸ்ரீ சாரதா தேவி அறநெறி பாடசாலையின் அதிபர் திருமதி கிரிஜா கோசசி தலைமையில் நடைபெற்ற மேற்படி நிகழ்வில் அதிதிகள் மலர் மாலை அணிவித்து வரவேற்கப்பட்டு மங்கள விளக்கேற்றலுடன் பொங்கல் நிகழ்வுகள் யாவும் ஆரம்பமானது .

நிகழ்வில் மாணவர்களின் கலை கலாச்சார நிகழ்வுகள் அரங்கை அலங்கரித்தன.

செய்தியின் உண்மைத்தன்மை

இச்சம்பவம் தொடர்பில் கல்வி அமைச்சு மற்றும் காவல்துறையினர் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.